Posts

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா வாழ்வும் பணியும் - இராமகிருஷ்ண பட்டாச்சாரியா

Image
இந்திய மெய்யியல் ஆய்வு மரபில் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் ‘உலகாயதம் : பண்டை இந்தியப் பொருள்முதல்வாதம் பற்றிய ஆய்வு’ என்ற வெளியீடு புதிய யுகத்தைத் தொடங்கி வைத்தது. ஆனால் இந்தியாவில் இருந்த கல்வித்துறை சார்ந்த சில புலமையாளர்களுக்கு 678 பக்கங்களைக் கொண்ட இந்த ஆங்கிலப் படைப்பின் பொருளடக்கத் தலைப்புகளின் வரிசையே திகைப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் இருந்த சிந்தனை பற்றிய வரலாற்றியலாளர்களும், தொல்சீர் இலக்கியப் புலமை யாளர்களும் பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் இந்நூலை வரவேற்றனர். மிக நன்கறியப்பட்ட ‘சீனாவில் நாகரிகமும் அறிவியலும்’ என்ற பல்தொகுதி நூலின் ஆசிரியர் ஜோசப் நீதம் “உங்கள் நூல் என்னுடைய நூலகத்தில் உண்மையாகவே மதிப்புக்குரிய இடத்தில் பாதுகாத்து வைக்கப் பட்டிருக்கும். நாம் பண்டைய இந்திய, சீன நாகரிகங்களை ஆராய்ந்து சில ஒத்த முடிவுகளுக்கு வந்தடைந்திருப்பது மிக வியப்புக்குரிய உண்மை” என்று சட்டோபாத்தி யாயாவுக்கு எழுதினார். மூத்த பிரெஞ்சு இந்தியவியலாளர் லூயிஸ் ரெனோ “இந்த நூல் உயர்ந்த மதிப்புடையதாக இருக்கின்றது. இந்தியவியலாளர்கள், சமூகவியலாளர்கள் ஆகியோரால் ஆழ்ந்து கவனமாகக் கற்கப்பட வேண்டியது...

பொருளாதாரமும் வரலாற்று ஆசிரியர்களும் - இர்பான் ஹபீப் தமிழில்: அசோகன் முத்துசாமி

1   இதர விஞ்ஞானங்கள் மற்றும் துணை விஞ்ஞானங்கள் போலவே பொருளாதார வரலாற்றுக்கும் அதற்கே உரிய கடந்த காலம் ஒன்று இருக்கிறது ;  அது மிகுந்த ஆர்வத்திற்குரிய ஒரு துறையாக இருந்த நாட்கள் உண்டு ;  அது சற்று வீழ்ச்சி அடைந்ததுபோல் தோன்றிய நாட்களும் உண்டு.  1870 லிருந்து  1900  வரையிலான காலகட்டத்து பிரிட்டிஷ் ஆட்சி பற்றிய விமரிசனம் தாதாபாய் நௌரோஜியின் கட்டுரைகளால் ஆரம்பிக்கப்பட்டு ,  ஒட்டுமொத்த பிரிட்டிஷ் ஆட்சிக்கும் நீடிக்கப்பட்டபோது இந்தியாவில் அதற்கு விடிவுகாலம் பிறந்தது. இந்த நீட்டிப்பு பிரதானமாக கடந்த நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் வெளியிடப்பட்ட ரொமேஷ் சந்தர் தத் எழுதிய இரண்டு தொகுப்புகளில் வந்தது. தவிர்க்க முடியாமல் மறு தரப்பிலிருந்து எதிர்வினைகள் வெளிவந்தன ; 1929 ல் முதலில் வெளியிடப்பட்ட வேரா அன்ஸ்டேயின்  ' இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி '2  என்கிற நூல் அனைத்து விஷயங்களிலும் அதிகாரபூர்வமான பிரிட்டிஷ் நிலைப்பாட்டை வழங்கியது. 3  இந்த விவாதம் கிட்டத்தட்ட ஏககாலத்தில் காலனியத்திற்கு முந்தைய கடந்த காலத்திற்கும் நீட்டிக்கப்பட்டது ; ' அக்பர் மரணத்தி...

மனிதர் எவ்வாறு கடவுளை உருவாக்கினர்

மரபுவழிக் கல்வியறிவின் தாக்கத்தின் கீழிருக்கும் பலருக்கு இயற்கையாகவே மனிதர் சமயப் பற்று உள்ளவர் என்று தோன்றுகிறது. நமது பள்ளி களின் கற்பித்தலில் தவிர்க்கவியலாத ஒன்றாய் இருக்கும் விவிலியம் மனிதகுலம் தொடக்கக் காலத்திலிருந்தே கடவுளை வழிபட்டு வருகின்றது என்று சித்திரிக்கின்றது. வன்மையாகக் கடவுள் மறுக்கப்படுதலும் , அதே வேளையில் கடவுள் போற்றப்படுதலும் எல்லாம் வல்ல கருணைமிக்க படைப்பாளர் ஒருவர் இருக்கின்றார் என்று மெய்ப்பிக்கப்படுகிறது என்பது சமயக் கவியின் அடித்தளம். பின்னோக்கிப் பார்த்தோமானால் நாம் இயற்கை யாகவே சமயப்பற்றுக் கொண்டவர்கள் இல்லை என்பது வெளிப்படையான உண்மை. நமக்குக் கற்பிக்கப் படுவதால்தான் நாம் சமயச் செயற் பாட்டில் நம்பிக்கை கொள்கிறோம். தேவால யங்கள் தங்களுடைய அரசியல் அதிகாரத்தின் மூலம் பள்ளிக் கல்வியில் சமயக் கல்வியைத் திணித்துள்ளன ; சமய நம்பிக்கை ஏதுமில்லாத ஒரு குறிப்பிட்ட பண்பாட்டு வளர்ச்சிநிலையில் உள்ள மக்களுக்கும் சமயம் மூடநம்பிக்கைகளைக் கற்பிக்கிறது. திருத்தொண்டர்களின் திருமுகங்கள் “கடவுள் எல்லாம் வல்ல தந்தை” என்ற நம்பிக்கையை விதைக்கின்றன. இத் தொடரில் உள்ள “தந்தை” என்ற சொல் நம...